1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (12:05 IST)

இன்று பாபர் மசூதி இடிப்பு நாள்! கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Police protection
டிசம்பர் 6" பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


 
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 நாடு முழுவதும் கருப்பு தினமாக இஸ்லாமிய அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களிலும் , ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முழுமையான சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  மேலும் ரயில் நிலைய நடைபாதை மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் மோப்பநாய் மூலம் சோதனையானது நடத்தப்பட்டது.

கோவை மாநகர் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.