புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (06:44 IST)

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: இன்றைய சென்னை விலை!

கடந்த சில மாதங்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதை பார்த்து வருகிறோம். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த திண்டாட்டத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இன்றும் பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனால் சென்னையில் இன்று பெற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 98.65 ரூபாய் என விற்பனையாகி வருகிறது 
 
அதேபோல் சென்னையில் டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 92.83 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 100 ரூபாயும், டீசல் விலை கிட்டத்தட்ட 93 ரூபாயும் விற்பனையாகி வருவதை அடுத்து வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.