குரூப் 1 தேர்வில் ‘பரியேரும் பெருமாள்’ – படம் பார்க்காதவர்கள் பதில் அளிப்பதில் சிக்கல்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தால் பலவிதமான அரசு பணிகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு நடைபெற்றது.
இதில் 2018ல் மாரி செல்வராஜ் இயக்கி வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வி ஒன்று உள்ளது. அதில் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை காட்டுகிறதா பரியேறும் பெருமாள் திரைப்படம்?” என கேள்வி கேட்கப்பட்டு சரியான விமர்சனத்தை குறிப்பிட சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கேள்வி அந்த படத்தை பார்க்காதவர்களுக்கும், திரைப்படம் பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கும் விடையளிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.