1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2024 (12:06 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கணினி வழியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கணினி வழி தேர்வு நடத்தப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஓஎம்ஆர் முறையில் தான் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் கணினி வழியில் நடத்தப்பட்ட அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவிக்கான தேர்வில் சில தொழில் பக்க கோளாறுகள் ஏற்பட்டதாகவும் இதனால் சில தேர்வர்கள் தேர்வினை முழுமையாக எழுத முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதை அடுத்து தேர்வர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கணினி வழி தேர்வு முறையை ரத்து செய்து விட்டது. இந்நிலையில், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும்,  ஓஎம்ஆர் முறையிலேயே நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும்   தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்‌)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு-IV (தொகுதி IV பணிகள்‌)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/english/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva