தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (08:55 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது 
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது என அறிவித்துள்ளதை அடுத்து மாணவ மாணவிகள் இன்று பள்ளிகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் 
 
10, 12 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே வழிகாட்டி நெறிமுறைகளை மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்கள் அனைவரும் வகுப்பறை தொடங்கும் முதல் முடியும் வரை மாஸ்க் அணிய வேண்டும் என்றும், அவ்வப்போது சனிடைசர் கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து இன்று காலை மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

இன்று இரவு வானில் ஒரு அரிய காட்சி.. புளூ மூனை காணத்தவறாதீர்கள்...

5 வருடங்களாக துரைமுருகன் பூட்டி வைத்திருந்த எம்.எல்.ஏ அலுவலம்.. இன்று சுறுசுறுப்பாக புத்தம் புது பொலிவுடன்.. இதுதாண்டா மாற்றம்..

8 பேரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கும்பல்.. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அரெஸ்ட்.. ட்ரோன் தொழில்நுட்பம்.. துப்பாக்கி சூடு.. போலீஸ் அதிரடி...

அடிக்கடி வந்து சோதனை செய்வேன்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

திருவள்ளுவரின் காவி உடை.. நடிகை கஸ்தூரியின் சாட்டையடி பதிவு:

அடுத்த கட்டுரையில்
Show comments