திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (09:09 IST)

தேர்தல் களத்தில் திருநங்கைகளை இறக்கிய கட்சிகள்! – பரபரக்கும் தேர்தல்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் முக்கிய கட்சிகளின் சார்பில் திருநங்கைகள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முக்கிய கட்சிகள் திருநங்கைகளை வேட்பாளராக அறிவித்து பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது. அதிமுக கட்சி சார்பில் சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு ஜெயதேவியும், பாஜக சார்பில் ராஜம்மா என்பவரும், திமுக சார்பில் வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு கங்கா என்று திருநங்கையும் போட்டியிடுகின்றனர்.