தமிழகத்தில் கொரோனா பரவல்: நாளை முக்கிய அறிவிப்பு என தகவல்

TN assembly
siva| Last Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (10:47 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேர்தலுக்கு பின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது
குறிப்பாக இரவு நேர ஊரடங்கு உள்பட ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் சில வதந்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் கொரோனாவி கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கு இருக்காது என்றும் அரசு ஏற்கனவே அளித்த தளர்வுகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

நாளை தமிழக அரசின் சுகாதாரத் துறையில் இருந்து என்ன அறிவிப்பு வெளியாக போகிறது என்பதை அறிய அனைத்து தமிழக மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :