புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (12:59 IST)

தஞ்சையிலும் சுதாகரன், இளவரசி சொத்துகள் அரசுடைமை! – ஆட்சியர் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சுதாகரன், இளவரசி விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி கடந்த மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அபராத தொகை செலுத்தாததால் சுதாகரன் இன்னும் சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று சசிக்கலா சென்னை வந்தடைந்தார். முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற இவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள இவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.