வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (17:00 IST)

தந்தை பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு!

subaveera pandiyan
2023-ம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூகநீதி கண்காணிப்புக் குழுத்தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும்,  சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது.  அந்தவகையில் 2023-ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி..! போலீசார் காப்பாற்றியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!
அதே போன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் “டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில், 2023-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது.