புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (19:03 IST)

மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு: இன்று முதலிடம் பிடித்த தஞ்சை

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 என்றும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1323ஆக உயர்ந்துள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 56 பேர்களில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் என்பதை தற்போது பார்ப்போம். தஞ்சையில் 17 பேர்களும், சென்னையில் 11 பேர்களும், திருவள்ளூர் மற்றும் தென்காசியில் தலா 5 பேர்களும், திருவாரூரில் 4 பேர்களும், திருச்சி மற்றும் வேலூரில் தலா 3 பேர்களும், தேனி, நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தஞ்சையில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து தமிழகத்தில் சென்னையில் 228 பேர்களும், கோவையில் 127 பேர்களும், திருப்பூரில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 66 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது