வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2023 (16:42 IST)

பேரிடர் முன்னறிவிப்புகளை அறிய புதிய செயலி.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவிப்பு..!

kkssr
பேரிடர் அறிவிப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு புதிய செயலி உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் நிலநடுக்கம் உள்பட பேரிடர்களை அறிந்து கொள்வதற்காக செயலி உருவாக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை மானிய கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தின் போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
 
TN-Alert என்ற செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART என்ற செயலி ஆகியவைகளுக்காக ரூபாய் 12.50 கோடி செலவு செய்யப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
தமிழகத்தில் சமீப காலங்களாக நிலநடுக்கம் உணர்ந்து வருவதை அடுத்து தேசிய நில அதிர்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த செயலி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
அதேபோல் நில அளவை, நில ஆவணங்கள் தொடர்பாக இ சேவைகள் தொடர்பான தகவல்களை பெறுவதற்காகவும் புதிய செயலி உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva