வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (11:52 IST)

பிளஸ்டூ தேர்ச்சி விகிதம் – திருப்பூருக்கு முதலிடம்…. காரைக்காலுக்கு கடைசியிடம் !

மாவட்ட வாரியாக பிளஸ்டூ தேர்ச்சி சதவீத விகிதத்தை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில் திரூப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்டு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ஆம் தேதி நிறைவுபெற்றன. இதையடுத்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளில் மொத்தமாக 91.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 88.57 சதவீதமும் மாணவிகள் 93.64 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளன. மாணவர்களை விட மாணவிகள் 5 சதவீதம் அதிகளவில் தேர்ச்சியடைந்துள்ளன.

இந்நிலையில் மாவட்ட வாரியாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. காரைக்கால் மாவட்டம் 84.87 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் :-
1.கன்னியாகுமரி -  94.81%
2.திருநெல்வேலி - 94.41%
3.தூத்துக்குடி - 94.23%
4.ராமநாதபுரம் - 92.30%
5.சிவகங்கை - 93.81%
6.விருதுநகர் - 94.44%
7.தேனி - 92.54%
8.மதுரை - 93.64%
9.திண்டுக்கல் - 90.79%
10.ஊட்டி - 90.97%
11.திருப்பூர் - 95.37%
12.கோயம்புத்தூர் - 95.01%
13.ஈரோடு - 95.23%
14.சேலம் - 90.64%
15.நாமக்கல் - 94.97%
16.கிருஷ்ணகிரி - 86.79%
17.தருமபுரி - 89.62%
18.புதுக்கோட்டை 90.01%
19.கரூர் - 94.07%
20.அரியலூர் - 89.68%
21.பெரம்பலூர் - 95.15%
22.திருச்சி - 93.56%
23.நாகப்பட்டினம் - 87.45%
24.திருவாரூர் - 86.52%
25.தம்ஞ்சாவூர் - 91.05%
26.விழுப்புரம் - 85.85%
27.கடலூர் - 88.45%
28.திருவண்ணாமலை - 88.03%
29.வேலூர் - 85.47%
30.காஞ்சிபுரம் - 89.90%
31.திருவள்ளூர் - 89.49%
32.சென்னை  - 92.96%
33.காரைக்கால் - 84.87%
34.புதுச்சேரி - 91.22%