புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2019 (14:34 IST)

திருவள்ளுவருக்கு வெள்ளையடித்தது திமுக! – பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு!

திருவள்ளுவரை காவி உடையில் பாஜக பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருவள்ளுவருக்கு வெள்ளை உடை அளித்தது திமுகதான் என பாஜக பிரமுகர் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தனது ட்விட்டரில் திருவள்ளுவரின் படத்தை காவி உடை, விபூதியோடு பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில திமுகவினர் மற்றும் தி.க கட்சியினர் இதை வன்மையாக கண்டித்து பதிவிட்டனர். அதை தொடர்ந்து #BJPInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் திருவள்ளுவர் யார்? இந்துவா? பௌத்தரா? என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக பிரமுகர் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டர் பதிவில் ” திருவள்ளுவரின் ஒரிஜினல் உடை "காவி" வெள்ளை அடித்தது திமுக 1810, 1885, 1935, 1970 வரை காவியுடை உடுத்தியிருந்த திருவள்ளுவரை "வெள்ளைக்கு" மாற்றிய "சிறுமை" கருணாநிதியை சாரும்” என்று நேரடியாக விமர்சித்துள்ளார்.

இதனால் திருவள்ளுவர் குறித்த விவாதம் மேலும் வலுவாகி வருகிறது. இரு தரப்பிலும் திருவள்ளுவர் என்ன உடை அணிந்திருந்தார் என்பதற்கான சரித்திர சான்றுகளை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.