Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் என்னை ஈவிகேஸ் இளங்கோவன் திட்டமாட்டார். திருநாவுக்கரசர்

Written By sivalingam
Updated: வியாழன், 2 மார்ச் 2017 (05:50 IST)
காங்கிரஸ் கட்சியும், உள்கட்சி பூசலும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் போல பிரியாதது என்பது கடந்த பல வருடங்களாக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும். குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் அடிக்கடி அவரது சொந்தக்கட்சியினர்களாலேயே சீண்டப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.



 



இந்த வகையில் சமீபத்தில் பேட்டியளித்த முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 'திருநாவுக்கரசர் என்பவர் யாரென்றே எனக்கு தெரியாது' என்று கிண்டலுடன் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த கருத்துக்கு இன்று பதில் கூறிய திருநாவுக்கரசர், 'ஈ.வி.கே.எஸ். என்னைத் தெரியாது என்று கூறியது நல்லது தான். என்னைத் தெரியாது என்று கூறியதால் இனிமேல் என்னை அவர் திட்ட மாட்டார். தெரிந்தவர்களைத் தான் திட்ட முடியும் தெரியாதவர்களை எப்படித் திட்ட முடியும்? என்று கூறினார்.  இதன் மூலம் திருநாவுக்கரசர்-ஈவிகேஸ் ஆகியோர்களுக்கிடையிலான உட்கட்சி பூசல் உச்சத்தை அடைந்திருப்பதால் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

எல்லாம் காட்டு

கேரளாவில் தவெகவுக்கு பலம் சேர்க்கும் நடிகர் தேவன்? விஜய்யை சந்திக்கிறார்!

கருணாநிதி நின்னுருந்தாலும் தோக்கடிச்சிருப்பேன்!.. வி.எஸ்.பாபு பேட்டி...

எம்பிக்களுக்கு அலுவலகம் கட்டி தாருங்கள்.. முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த ஜோதிமணி எம்பி..

நண்பனை நரபலி கொடுத்த நபர்.. தலையை வெட்டி வீட்டில் பூஜை செய்த கொடூரம்!...

காங்கிரஸ் இல்லையென்றால் விஜய் முதல்வராகியிருக்க முடியாது: மாணிக்கம் தாகூர்..

அடுத்த கட்டுரையில்
Show comments