வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:27 IST)

சீமான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை, அவர் பொய் சொல்கிறார்: திருமுருகன் காந்தி..!

thirumurugan
சீமான், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை சந்தித்ததே இல்லை என்றும் அவரை சந்தித்ததாக சீமான் பொய் சொல்கிறார் என்றும் திருமுருகன் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்தாகவும் அவருடன் உணவு சாப்பிட்டதாகவும் பல மேடைகளில் பேசி உள்ளார். 
 
ஏற்கனவே சீமான் பொய் சொல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ள நிலையில் தற்போது திருமுருகன் காந்தியும்  பிரபாகரனை சீமான் சந்தித்தது மற்றும் உணவு உண்டது என கூறியது முழுக்க முழுக்க பொய் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழர், திராவிடர் என பிரிவினை ஏற்படுத்தி தமிழகத்தை சீமான் கூறு போடுகிறார் என்றும் விடுதலைப்புலிகள் கட்சி கொடியை தனது கட்சி கொடியாக பயன்படுத்துவதை சீமான் நிறுத்த வேண்டும் என்றும் பேட்டி அளித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva