வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 27 பிப்ரவரி 2025 (10:52 IST)

சினிமாவில் காலாவதியானால் அரசியலுக்கு வந்துடுறாங்க! - விஜய்யை விமர்சித்த திருமா?

vijay thiruma

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சியில் விஜய் பேசியது குறித்து விசிக திருமாவளவன் விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. நேற்று தவெக-வின் இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் பேசிய விஜய், மத்திய, மாநில அரசுகளை பாசிச அரசு, பாயாச அரசு என விமர்சித்ததுடன், பூத் கமிட்டியை பலப்படுத்த ஒரு மாநாடு நடத்த இருப்பதாகவும் பேசியிருந்தார்.

 

இந்நிலையில் விஜய்யின் நேற்றைய பேச்சை தொடர்ந்து அதை விமர்சிக்கும் விதமாக பேசிய திருமாவளவன் “சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து சிலர் அங்கீகாரம் பெறுகின்றனர். சினிமாவில் நன்றாக சம்பாதித்து சொகுசாக வாழ்ந்துவிட்டு அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். அரசியலுக்கு வரும் நடிகர்கள் பிரபலமானவர்களாய் இருப்பதால் ஊர் ஊராய் செல்லத் தேவையில்லை என்ற சொகுசு இருக்கிறது.

 

ஆனால் நான் 35 ஆண்டுகள் கடுமையாக உழைத்த பிறகே விசிக அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K