Daily Horoscope

கலைஞர் பேனா சின்னத்தை உடைப்பவர் நண்பர்!. நான் எதிரியா?!.. திமுகவுக்கு திருமா கேள்வி!...

Updated: திங்கள், 13 ஜூலை 2026 (11:42 IST)
கடந்த சில தேர்தல்களாகவே விசிக திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது. 2026 தேர்தலில் திமுக கூட்டணியிலும் விசிக இருந்தது. ஆனால், தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அந்த கட்சிக்கு விசிகவுக்கு ஆதரவு கொடுத்தது. இதன் காரணமாக அக்கட்சி எம்.எல்.ஏ வன்னியரசுக்கு அமைச்சர் பதவியை தவெக கொடுத்திருக்கிறது.

இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. எங்களால் ஓட்டு வாங்கி விட்டு தவெகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டனர் என திமுகவினர் பலரும் பேசி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையில் நடந்த ஒரு விழாவில் பேசிய திருமாவளவன் கலைஞருக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என்று சொன்னவரோடு ஒரே நிகழ்ச்சியில் கொஞ்சி குலாவுகிறார்கள். ஆனால், திருமாவளவனை எதிரி’ என்கிறார்கள்’ என கூறினார். சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் சீமானும், ஸ்டாலினும் பேசிக்கொண்டிருந்தனர். அதைத்தான் திருமா இப்படி குறிப்பிட்டார்.

மேலும் ‘கூட்டணி ஆட்சி என திமுக தலைவர் அறிவித்திருந்தால், விரும்பிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தந்திருந்தால் இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்திருக்க  வாய்ப்பில்லை’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.

எல்லாம் காட்டு

அறப்போர் இயக்கம் கொடுத்த டெண்டர் புகார்.. உடனடியாக விசாரணை செய்கிறது தவெக அரசு...

2027-ல் எல் நினோ சம்பவம் பண்ணும்!.. கடுமையான வெயில் இருக்கும்!.. எச்சரிக்கை!...

ஃபிரிட்ஜ் வெடித்து குடும்பமே பலி!.. 4 பேர் உயிரிழந்த சோகம்!...

ஆ ராசா, சேகர்பாபுவை அடுத்து இன்னொரு திமுக பிரபலம் மீதும் வழக்கு.. தவெக அரசு அதிரடி...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு.. எம்டிசி பேருந்து ஓட்டுநர் பரிதாப பலி..

அடுத்த கட்டுரையில்