என்னை கைது செய்யாமல் காவலாளியை கைது செய்துள்ளனர். சீமான் மனைவி ஆவேசம்..!
காவலர்களால் ஒட்டப்பட்ட சம்மனை நான் தான் கிழிக்க சொன்னேன். ஆனால் என்னை கைது செய்யாமல், காவலாளியை கைது செய்துள்ளனர் என்று சீமான் மனைவி ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் வீட்டில் நேற்று காவல்துறையினர் சம்மன் ஒட்டிய நிலையில், அவரது வீட்டு காவலாளி அதை கிழித்ததாக கூறி, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த சீமான் மனைவி கயல் விழி,
"சம்மனை முறையாக நாங்கள் கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ள தயாராக இருந்தோம். ஆனால் காவல்துறையினர் வீட்டின் கதவில் அதை ஒட்டி விட்டு சென்றனர். வெளியே வந்து அதை படிக்க சங்கடமாக இருந்ததால், நான் தான் காவலாளியிடம் அதை எடுத்து வரச் சொன்னேன். ஆனால் அதை எடுக்க முடியாததால், அவர் கிழிக்க நேரிட்டது. இதனால் என்னை கைது செய்யாமல், காவலாளியை கைது செய்துள்ளனர்,"
என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் வந்தபோது, நாங்கள் கதவை திறக்க முடியாது என்று கூறவில்லை. காவல்துறையினர் வேண்டுமென்றே இப்படி சொல்லுகிறார்கள். காவல்துறை மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் அவர்கள் நேற்று நடந்து கொண்டதை ஏற்க முடியாது. மேல் அதிகாரிகளின் அழுத்தத்தால் இவ்வாறு செய்திருக்கிறார்கள்.
காவலாளி தான் வைத்திருந்த துப்பாக்கியை போலீஸிடம் கொடுக்கவே அவர் எடுத்து சென்றார். மிரட்டுவதற்காக அல்ல. கைது செய்யப்பட்ட அவரை காவல்துறையினர் அடித்துள்ளனர். இதை அடுத்து, மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்வோம்,"
என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran