1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (08:37 IST)

ஒண்டி வீரன் வீரவணக்க நாள்; தென்காசியில் ஊரடங்கு உத்தரவு!

144
தென்காசியில் ஒண்டிவீரன் வீரவணக்க நாள், பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவில் உள்ள பச்சேரி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஒண்டிவீரன் கோவிலில் ஆகஸ்டு 20ம் தேதி (நாளை) வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி நெற்கட்டும்சேவல் கிராமத்தில் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இரண்டு விழாக்களுக்கும் பல்வேறு சமூக மக்களும் மாலை அணிவித்து, மலர் தூவி விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

கொரோனா காரணமாக இந்த நிகழ்வுகளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த 144 தடை உத்தரவு இன்று தொடங்கி செப்டம்பர் 2ம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாவை கொண்டாடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.