தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் – சாதித்த வீரலட்சுமி!
தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக தேனியைச் சேர்ந்த வீரலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனியைச் சேர்ந்த வீரலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். ஆட்டோமொபைல்ஸ் படித்த வீரலட்சுமி கணவருக்கு உதவியாக டாக்ஸி ஓட்ட ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் தனது சொந்த ஊரான தேனியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சி பெற்ற அவர் இப்போது சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.