திறக்காத டாஸ்மாக்... கடுப்பாகி பூட்டை உடைத்து திருட்டு!
ராசிபுரம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளைபட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற தொடங்கியுள்ளன.
ஆம், ராசிபுரம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளைபட்டுள்ளன. முத்துகாளிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகாலையில் புகுந்த மர்மநபர்கள் மதுபானங்களை எடுத்து சென்றனர்.