1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (14:29 IST)

காதலிக்க மறுத்த மாணவியை வெட்டிக் கொன்ற இளைஞர் ! அதிர்ச்சி சம்பவம்

thirubhuvanai
திருபுவனையைச் சேர்ந்த மாணவியை காதலிக்க மறுத்ததால்,  வாலிபர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருபுவனையில் உள்ள சன்னியாசிக் குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவரது மகள் கீர்த்தனா, அங்குள்ள அரசுக் கலைக்கல்லூரியில் பீ காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகளான ரத்தினவேல் கீர்த்தனாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

ரத்தினவேலின் காதலை கீர்த்தனா ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. தன்னைக் காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் ரத்தினவேல் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.