புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 16 மார்ச் 2023 (22:06 IST)

பெண்ணை கட்டையால் தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்ற திருடன்...!பரவலாகும் வீடியோ

Trichy
திருச்சி மாவட்டத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்ற பேராசிரியையை ஒரு கொள்ளையன் கட்டையால் தாக்கி, அவரது பொருட்களை எடுத்துக்கொண்டு தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்ற பேராசிரியை ஒருவரை கட்டையால் தாக்கி, அவரை தரதரவென இழுத்துச் சென்றதுடன், அவரின் இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் நடந்துள்ள இந்தச் சம்பவம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில், ''

திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்துசென்று,பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது, யார்க்கும்-எதற்கும் அஞ்சோம்  எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது, திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று,பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது,

யார்க்கும்-எதற்கும் அஞ்சோம்  எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது,ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தது போல் தமிழ்நாட்டில் எது நடந்தாலும், சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும், விளம்பர அரசியல் செய்யும் விடியா அரசின் முதல்வரின் காதுகளுக்கு மட்டும் அது எட்டுவதே இல்லை என்பது வேதனைக்குரியது’ என்று பதிவிட்டுள்ளார்.