முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல-தமிழ்நாடு அரசு விளக்கம்
தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திமுக கட்சியின் நாளிதழான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என பாஜகவின் ஸ்ரீனிவாசன் புகார் அளித்திருந்தார்.
இப்புகாரை அடுத்து தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணை நடத்தி, முரசொலி அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் அரசியல் ஆதாரம் தேடுவதற்காக உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்து வருவதாக முரசொலி அறக்கட்டளை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜகவின் ஸ்ரீனிவாசன் அளித்த புகாரில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையயம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.