வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (19:06 IST)

புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை.  பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அதனால், மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சில மாதங்களாக இந்தியாவில் கொரொனா தொற்றுப் பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில், சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, புதுச்சேரி, கேரளா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் முக்கவசம் அணியய வேண்டுமென்று உத்தரவிரப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,880 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டடுள்ளதாக் மத்திய சுகாதாரடத்துறை தகவல் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை 35, 199 பேர் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21  பேர் உயிரிழ்னதுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலும் கொரொனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில்,  அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவமனைகளில் ஊழியர்கள், அதிகாரிகள் முக்கவசம் அணிய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 329 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனை பெற்று வீட்டில் தனிமைப்படுத்டிக் கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சை ஏற்பாடு தயாராகவுள்ளது. திரவ நிலை ஆக்சிஜன் கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன்கள் தயாராகவுள்ளன.  மேலும், தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸின் பாதிப்பு வீரியமாக இல்லை.  பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அதனால், மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்று கூறினார்.