திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 9 ஜூலை 2017 (22:06 IST)

முதலிரவில் மாப்பிள்ளை திடீர் எஸ்கேப்! அதிர்ச்சியில் மணப்பெண்

முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருந்து வரும் நிலையில் நெல்லையில் முதலிரவு அன்று மாப்பிள்ளை திடீரென காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



 
 
திருநெல்வேலி மாவட்டம் விகேபுரம் அருகே செட்டிமேடு மெயின் ரோட்டை சேர்ந்த ஜோசப் என்பவருக்கும், தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்தின் பேரில் திருமணம் நடந்தது. திருமணத்தை அடுத்த அனைத்து சடங்குகளும் நல்லமுறையில் நடந்த நிலையில் இரவு முதலிரவுக்காக பெண் வீட்டார் ஏற்பாடு செய்தனர்
 
இந்த நிலையில் திடீரென மாப்பிள்ளை காணாமல் போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் மாப்பிள்ளையை எல்லா இடங்களிலும் தேடினர். ஆனால் நள்ளிரவு ஆகியும் மாப்பிள்ளையை கண்டுபிடிக்க முடியாததால் வேறு வழியின்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலிரவு அன்றே மாப்பிள்ளை திடீரென எஸ்கேப் ஆனது அந்த பகுதியை பெரும் பரபரப்பை ஆழ்த்தியுள்ளது