தம்பிதுரையின் கரூர் தொகுதியை குறிவைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்
அதிமுக-பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இன்று இரவு தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகிறார். எனவே இன்று கூட்டணி குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவை இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த தம்பிதுரையின் தொகுதியான கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு கரூர் தொகுதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
பாஜக அரசின் திட்டங்களை மக்களவையில் கடுமையாக விமர்சனம் செய்த தம்பிதுரையை வரும் தேர்தலில் போட்டியிடவிடாமல் செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம் என்றும், பாஜகவின் திட்டத்தை செயல்படுத்தவே அமைச்சர் விஜய்பாஸ்கருக்கு கரூர் தொகுதியை வழங்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து தம்பிதுரை என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், பாஜகவுக்கு 8 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.