தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்திரவை மீறி, கரூர், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளரை, அம்மாவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை மாற்றியிருக்கலாம் என கரூர் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்ச்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் விவகாரம் தான்.
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா! மது விநியோகம்! உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு செல்ல உடனே தேர்தலை நிறுத்தியது.
இந்த விவகாரம் தேர்தல் வரலாற்றிலேயே பெரும் ஆச்சரியத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தேர்தல் ஆணையமே தங்களது தேர்தல் ஆணையத்தை தவறாக பேசி விடக்கூடாது என்பதற்காக தஞ்சை தொகுதியையும் சேர்த்து இரண்டு தொகுதியையும் தேர்தல் ரத்து என்று சொல்லும் அளவிற்கு வாக்காளர்களையும் ஏமாற்றியது மட்டுமில்லாமல், அத்தொகுதியில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளையும், கட்சி மற்றும் பிற சுயேட்சை வேட்பாளர்களும் பெருமளவிற்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் தேர்தல் அப்ப வருமா? இப்ப வருமா? என்று காத்துக் கொண்டிருந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆங்காங்கே தேர்தல் நின்றது குறித்து பேட்டியளித்த போது, குறிப்பிட்ட அந்த இரு தொகுதிகளில் மட்டும் பணம் பட்டுவாடா செய்யப்பட வில்லை. எல்லா தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா நடந்துள்ளது. பாவம் அந்த இரு தொகுதி வேட்பாளர்கள் மட்டும் என்ன தவறு செய்தார்களோ? என்று ஆதங்கத்துடன் பேட்டியளித்தனர்.
ஆனால் தமிழகத்தில் 234 தொகுதிகளில் நடந்து முடிந்த 232 சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் முதல்வராக ஜெயலலிதா வெற்றி வாகை சூட, அப்போது திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹார்ட் அட்டாக்கில் காலமானார்.
ஆக மொத்தம் தமிழகத்தில் தற்போது மூன்று தொகுதிகளில் சட்டசபை தேர்தல் காலியாக உள்ளது. முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவிற்கு ஒரே கவலை, 134 தொகுதிகளை மட்டுமே நாம் கைப்பற்றியுள்ளோம், காங்கிரஸ் 8 தொகுதிகளையும், திராவிட முன்னேற்ற கழகத்தினர் 89 தொகுதிகளையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஒரு தொகுதி என்று மொத்தம் 98 தொகுதிகளை தி.மு.க கூட்டணி தக்க வைத்துள்ளது.
அ.தி.மு.க வில் ஒரு எம்.எல்.ஏ இறந்து போக மீதமுள்ள 133 தொகுதிகள் மட்டும்தான் என்றும், நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதியில் நிச்சயம் 3 தொகுதிகளில் நாம் ஜெயிக்க வேண்டுமென்றும், என்னதான் மக்களுக்கு விலையில்லா திட்டங்கள் கொடுத்தாலும் சரி, மானியம் கொடுத்தாலும் சரி, வாக்கிற்கு பணம் கொடுத்தாலும் சரி, மக்கள் மனம் மாறியுள்ளதை உணர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றார்.
ஆனால் தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் திடீரென்று மக்களின் குறைகளை கேட்க அந்த மக்களவை தொகுதி உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரை, புதன் கிழமை முதல், மக்களை சந்தித்து வருகின்றார். மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லாமல், அவர் மட்டுமே பரப்புரை மேற்கொண்டு வரும் இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதல்வருமான, அ.தி.மு.கவினரின் அம்மாவின் வேட்பாளர் செந்தில் பாலாஜியை அழைக்காமல், அவரே தன்னிச்சையாக செயல்பட்டு மக்கள் மனதில் என்ன உள்ளது வேட்பாளரை மாற்ற வேண்டுமென்று கருதி தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றார்.
ஆனால் செல்லும் இடத்தில் நிதி நிலை அறிக்கை மற்றும் நலத்திட்டங்கள் விளக்கும் கூட்டங்கள் மற்றும் சுற்றுப்பயண விவரம் என்று அச்சிட்ட அந்த நோட்டீஸில் இன்று (18-08-16) அரவக்குறிச்சி தொகுதி, க.பரமத்தி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் தும்பிவாடி, அணைப்பாளையம், நஞ்சைக்காளகுறிச்சி, எலவனூர், தொக்குபட்டி, சூடாமணி, ஆரியூர், நடந்தை, ஆரியூர், கோடாந்தூர், கடலூர் மேல்பாகம், கடலூர் கீழ்பாகம் என்ற இடத்தில் வாக்குகளை சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் கடந்த 2011ல் ஆண்டு அதே அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும், கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில் நாதனையும், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, கரூர் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வரும் இந்நிகழ்ச்சியில் ஆங்காங்கே இவர் சென்றதாலோ இல்லையோ தெரியவில்லை மக்கள் கூட்டம் இல்லை.
மேலும் நோட்டீஸில் அச்சிடப்பட்டுள்ள பணிகளை அவர் செய்தாரோ இல்லையோ? கட்சியில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து எத்தனை வார்டு உள்ளது, இந்த வார்டில் யார், யார் ஜெயித்துள்ளார்கள் என்று ரகசியமாக கணக்கு எடுத்து வரும் தம்பித்துரை இன்றும் க.பரமத்தி வடக்கு ஒன்றியம் பகுதிகளில் பஞ்சாயத்து பஞ்சாயத்தாகவும், வார்டு, வார்டாக பிரச்சினைகளை கேட்டு வருகின்றார். கூடவே கட்சி நிர்வாகிகளின் மன நிலை எப்படி உள்ளது என்பதை கேட்டறிந்து வருகின்றார்.
இந்த சம்பவத்தின் போது கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், தங்கள் தொகுதியில் தேர்தல் நடத்தாதற்கு காரணமே இவர் தான் என்று தம்பித்துரையை பார்த்து கூட்டத்திற்கு செல்லாமல் பொதுமக்கள் அவரை ஒரங்கட்டுகின்றனர். மேலும் செல்லுமிடமில்லாமல் எதிர்ப்பு என்பது போல, ஒரு புறம் கூட்டம் இல்லையே என்ற கவலை ஒரு புறம்.. எங்க வேட்பாளர் செந்தில் பாலாஜி எங்கே அ.தி.மு.க வினர் என்று கொதிப்பு அடைய, வேட்பாளரை மாற்றி விட்டாராம் என்று ஆங்காங்கே புரளி கிளம்பி வரும் நிலையில் தம்பித்துரையோ சிரித்த வண்ணம் உள்ளாராம், ஆக அம்மாவின் உத்திரவை மீறி அம்மாவின் வேட்பாளரை மாற்றிய தம்பித்துரை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தம்பித்துரைக்கு ஏற்கனவே சிக்கல் மேல் சிக்கலாக இருக்கும் நிலையில் டெல்லியில் சசிகலா புஷ்பா வின் விஷயத்தில் கோட்டை விட்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, அங்கே அம்மாவை வசப்பாடு பாடி, முதன்முறையாக தம்பித்துரையின் தயவால் அம்மாவை திட்டி வருகின்றார் என்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்குகளில் வலம் வர, தற்போது சசிகலா புஷ்பாவின் பிரச்சினையை விட்டு விட்டு, திடீரென்று அரவக்குறிச்சி தொகுதியில் தனது பாரவையை பதித்துள்ளார் என்றால் வேட்பாளரை மாற்றியது தானே அர்த்தம்.
அப்படி இல்லையென்றால் அம்மாவின் வேட்பாளரான செந்தில் பாலாஜி இல்லாமலும், கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லாமல் தன்னந்தனியே செயல்பட்டு வரும் இவரது செயல் அ.தி.மு.க வினரிடையே பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அம்மாவின் உத்திரவையே மீறி, பல வேலைகளை செய்து வரும் தம்பித்துரை தற்போது, அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில் நாதனா? சாகுல் அமீதா? என்று அவர்களுக்குள்ளேயே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றாராம்.
அம்மாவின் உத்திரவிற்கிணங்க என்று சொல்லும் அ.தி.மு.க வினர் மத்தியில் அம்மாவின் உத்திரவை மீறிய மக்களவை துணை சபாநாயகரின் செயல் இப்பகுதி அ.தி.மு.கவினரிடையே மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த அ.தி.மு.கவினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவ்வப்போது தமிழ், தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா என்று தம்பித்துரை டங்க் ஸ்லீப் ஆகி பேசி வரும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நின்றதற்கு மூலக்காரணமே தம்பித்துரைதானாம்.
அதனாலேயே தம்பித்துரை தேர்தல் ஆணையத்திடம் மோடி உத்திரவிற்கிணங்க, (எப்போதுமே அம்மா உத்திரவிற்கிணங்க, தேர்தலினால் மோடியாம்) தேர்தல் தேதியை அறிவித்து விட்டு தற்போது தேர்தலில் வேட்பாளரை யாரை நிறுத்தலாம் என்று நிர்வாகிகள் மத்தியில் பேசி வர, யாரும் கூட்டம் கூடாததினாலும், போயஸ் கார்டன் வரை இந்த செய்தி சென்றுள்ளதாக நிச்சயம் தம்பித்துரைக்கு அம்மா தரப்பில் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வர இருக்கும் என்று உண்மையான அ.தி.மு.க வினர் கூறி வருகின்றனர்.
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்