1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (14:00 IST)

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு தள்ளிவைப்பு!!

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. 

 
பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஒரு சில பொருட்களுக்கான வரி குறைப்பு, ஜவுளிக்கான வரி உயர்வு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை தள்ளிவைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5%ல் இருந்து 12% ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.