செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 1 மே 2024 (09:15 IST)

தென்காசி ஸ்ட்ராங் ரூமில் 93 சிசிடிவிக்கள் பழுது: அதிருப்தி தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி..!

தமிழகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதும் 24 மணி நேரமும் சிசிடிவி செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கோவை, நீலகிரி உள்பட ஒரு சில பகுதிகளில் சிசிடிவி பழுதானது அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தென்காசியிலும் 93 சிசிடிவி கேமராக்கள் பழுதானதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறிய போது தென்காசி ஸ்ட்ராங் ரூமில் 93 சிசிடிவிகள் பழுதானதாக கூறுவது நம்பும்படி இல்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரகாஷ் சாஹூ நேரில் சென்று ஆய்வு செய்து உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

மேலும் மக்கள் தீர்ப்பை முறைவேடாக மாற்றும் திட்டத்தில் எவர் ஈடுபட்டாலும் அது கண்டிக்கத்தக்கது என்றும் மின்தடை ஏற்பட்டாலும் யுபிஎஸ் மூலம் அனைத்து சிசிடிவிக்களூம்  இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Edited by Siva