திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (08:38 IST)

தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை.. தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றது யார்?

தென்காசி தொகுதியில் மீண்டும் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
தென்காசி சட்டமன்ற தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்யப்பட்டது. தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி என அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது
 
வாக்கு எண்ணிக்கைக்கு பின் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாசை விட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
 
காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் அவர்களுக்கு 1606 தபால் வாக்குகளும் அதிமுகவின் செல்ல மோகன் தாஸ் பாண்டியன் அவர்களுக்கு 673 தபால் வாக்குகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva