செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (15:55 IST)

2024ம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு!

teachers
2024ம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 20ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்  விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பப் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்காணும் பணியிடங்களுக்கு இணையவழி வாயிாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி மார்ச் 20 என  நீட்டிக்கப்படுகிறது.
 
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம்  மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம்  மேற்கொள்ள விரும்பினால் மார்ச் 21க்குள் திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
 
Edited by Siva