1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (19:16 IST)

டாஸ்மாக்கில் பணி புரிபவர்களுக்கு உரிய பாதுகாப்பும், இல்லை, சம்பள உயர்வும் இல்லை

கரூரில் உள்ள தனியார் மஹாலில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் சிறப்பு அவசர ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டத்தலைவர் கே.கே.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகிக்க இந்த கூட்டத்திற்கு சிறப்புரையாற்றிய தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி.சிவா செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் கூறுகையில், கடந்த 15 வருடங்களாக டாஸ்மாக்கில் பணிபுரியும் எங்களுக்கு (டாஸ்மாக் கடை) பணி நிரந்தரமில்லை என்றும், சம்பளம் உயர்வு இல்லை என்றதோடு, பாதுகாப்பும் இல்லை என்றார். ஆகவே, வரும் மே 1 ம் தேதி கரூரில் மண்டல மாநாடு நடத்த உள்ளதாகவும், இந்த மண்டல மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாகவும், தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு அரசின் பணத்தை எங்கள் டாஸ்மாக் கடைகள் மூலம் தான் சம்பாதித்து கொடுத்து வருகின்றோம்., கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு எந்த வித பணி மற்றும் பதவி உயர்வும் இல்லை, சம்பளம் உயர்வும் இல்லை, பாதுகாப்பும் இல்லை என்று வேதனையோடு தெரிவித்தார். இந்த பேட்டியின் போது, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
 

சி.ஆனந்தகுமார்.கரூர்