புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (09:08 IST)

தமிழகத்தில் எந்தெந்த ரயில்கள் ரத்து? – பட்டியல் இதோ!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள சூழலில் மக்கள் பயணத்தை தவிர்த்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி அடுத்த ஏப்ரல் மாதம் 6, 13, 20 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் – தூத்துக்குடி வழித்தடத்தில் செய்லபடும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 7 மற்றும் 14 தேதிகளில் தூத்துக்குடி – எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில் மற்றும் 21ம் தேதி தூத்துக்குடி – எழும்பூர் விரைவு ரயில் சேவைகள் ரத்தாகிறது.

நாகர்கோவில் வழித்தடத்தில் ஏப்ரல் 8 மற்றும் 15ல் நாகர்கோவில் – தாம்பரம் ரயிலும், 12ம் தேதி தாம்ப்ரம் – நாகர்கோவில் ரயிலும், ஏப்ரல் 3 மற்றும் 10 தேதிகளில் நெல்லை – எழும்பூர் ரயில்களும், ஏப்ரல் 5 மற்றும் 12 தேதிகளில் எழும்பூர் – நெல்லை ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர பல்வேறு வழித்தடங்களில் பாசஞ்சர் ரயில்களும், வார சிறப்பு ரயில்களும், வட இந்தியா வரை பயணிக்கும் சில சிறப்பு ரயில்களும் ரத்தாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.