ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (08:01 IST)

இந்த மருந்துதான் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தியது – சீன அரசு அறிவிப்பு !

கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பானின் Favipiravir என்ற மருந்து கொடுக்கப்பட்டு அதில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,20,000 பேரை எட்டியுள்ளது. உலகளவில் இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9000 ஐ நெருங்கியுள்ளது. முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் இப்போது பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன அரசு ஜப்பானின் புஜுபுல்ம் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள Favipiravir என்ற மருந்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குப் பெருமளவில் உதவியதாக சொல்லியுள்ளது. இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்களில் 340 பேர் முழுவதும் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்துகளை சாப்பிட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.