புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (10:53 IST)

கொரோனா குணமடைந்தோர் அதிகரிப்பு! – டாப்புக்கு வந்த தமிழகம்!

கொரோனாவால் தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்துள்ள அதே சமயம் குணமானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கில் கட்டுப்பாட்டு தளர்வுகள் கூட அளிக்காமல் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவுக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் அதிகமானோர் குணமாகி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது வரை 1,520 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 457 பேர் வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரொனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 30.06 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், பலியானவர்கள் சதவீதம் 1.3 ஆக உள்ளது.