புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (20:38 IST)

இனிமேல் யாரும் டிக்டாக் பயன்படுத்தமுடியாது: ஆப்பு வைத்த அமைச்சர்

டிக்டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்ய போவதாக அமைச்சர் மணிகண்டன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாள்தோறும் டிக் டாக் செயலியால் பல்வேறு விபத்துகளும், குற்ற சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கடந்த வருடமே டிக் டாக் செயலி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.

எனினும் தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் செயலியில் இடம்பெறாது என்று கூறி அனுமதி வாங்கி மீண்டும் வந்தது டிக்டாக் செயலி. இந்நிலையில் இந்தியாவில் வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும் தமிழ்நாட்டிற்கு டிக் டாக் வேண்டாம் என முடிவெடுத்துள்ளது அமைச்சரவை.

இதுகுறித்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் “டிக் டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்வதற்கான கடிதம் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது” என்று கூறியுள்ளார். மத்தியிலிருந்து அனுமதி வந்துவிட்டால் எப்போது வேண்டுமானாலும் டிக்டாக் செயலி தடை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.