வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (18:20 IST)

உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கை! – தமிழ்நாடு முதலிடம்!

Tamil New Year - Foods
பாதுகாப்பான உணவை வழங்கும் மாநிலங்கள் குறித்த உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மக்களுக்கு தரமான,சுகாதாரமான உணவு கிடைக்கும் மாநிலங்கள் குறித்த ஆய்வை மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் மேற்கொண்டு குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் 2021-2022ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் மக்களுக்கு தரமான உணவை அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத்தும், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளன.