வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (14:48 IST)

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழு! – அரசாணை வெளியீடு!

TN assembly
தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ள நிலையில் அதில் உள்ள பல திட்டங்களை ஏற்க முடியாது என தமிழ அரசும் தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்கள் முன்னதாக தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில கல்விக் கொள்கைகளை உருவாக்க 13 பேர் கொண்டு குழு அமைக்கப்படுகிறது. நீதியரசர் முருகேசன் தலைமையிலான இந்த 13 பேர் கொண்ட குழு ஒரு ஆண்டுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த குழுவில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகளாவிய கல்வி, இளம் பருவத்தினருக்கான கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அறிக்கை தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.