அவசரமாக பணியிடங்களை நிரப்பும் அரசு: உள்ளாட்சி தேர்தல் காரணமா?
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களை அரசு வேகமாக நிரப்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 2011க்கு பிறகு நடைபெறாமல் உள்ளதால் ஊரக வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. இதனால் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்தி கொடுப்பதில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாமல் இருக்கும் ஊராட்சி செயலர், எழுத்தர், டிரைவர், இரவு காவலர் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பணியிடங்களை நிரப்பினால் உள்ளாட்சியில் கிடப்பில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முடியும். தேர்தலுக்கு முன்னால் பணிகள் முடிக்கப்பட்டால் மக்களிடையே அளுங்கட்சிக்கு மதிப்பு கிடைக்கும் என்பதால் இந்த உடனடி பணியமர்வை செய்வதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் எதிர்க்கட்சிகள் தரப்பில் இந்த பணியமர்த்தலுக்கு உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் லட்ச கணக்கில் பணம் பெறுவதாகவும், அதைதான் உள்ளாட்சி தேர்தலுக்கு செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் பேசிக் கொள்கின்றனர்.