1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (08:52 IST)

தமிழகத்தில் பேருந்து கட்டணமும் உயர்கிறதா? மக்களுக்கு அதிர்ச்சி!

தமிழகத்தில் ஊரடங்குக்குப் பின் பேருந்து கட்டணம் உயரலாம் என சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் குவார்ட்டர் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை விலை அதிகமாக விலையை ஏற்றியுள்ளது.

ஊரடங்கால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் எல்லாம் குறைந்துள்ள வேளையில் பல விலையேற்றங்களை அறிவித்துள்ளது. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது மட்டும் டாஸ்மாக் மது வகைகளின்  விலையையும் ஏற்றியது. இத்தோடு நில்லாமல் ஊரடங்குக்குப் பின் போக்குவரத்து தொடங்கும் போது பேருந்துகளின் கட்டணமும் உயரலாம் என தெரிகிறது. ஊரடங்குக்குப் பின்னர் பாதி பயணிகளோடு பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.