செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : சனி, 10 செப்டம்பர் 2016 (18:25 IST)

தமிழர்களை பெருமைப்படுத்திய அந்தத் தருணம்: வீடியோ

பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவையும் தமிழகத்தையும் உலகறிய பெருமையைப் படுத்தியுள்ளார்.


 
 
தமிழ்நாட்டை சேர்ந்தவர் பாராலிம்பிக்ஸில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. அதனால் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 

மேலும், மாரியப்பன், 1.89 மீட்டர்  உயரத்தை தாண்டி, 2012 ஆம் ஆண்டு பாராலிம்பிக்ஸில் போட்டியில், பிஜி நாட்டின் இலியீச டெலான தாண்டிய 1.74 மீட்டர் உயர சாதனையை முறியடித்து, உலக சாதனை படைத்துள்ளார் என்பது தமிழர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 
 
தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ரூ.75 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. தமிழக அரசு அவருக்கு ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளது. நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தனது பங்களிப்பாக ரூ.50 ஆயிரம் பரிசு அறிவித்திருக்கிறார். 
 
தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல தாண்டிய உயரத்தை பாருங்கள், பாராட்டுங்கள்!