பாடத்திட்டத்தில் பாரத் சேர்த்ததால் தேச உணர்வு மேலோங்கும்: தமிழிசை செளந்திரராஜன்
பாடத்திட்டத்தில் உள்ள இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்று மாற்ற பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பாடத்திட்டத்தில் பாரத் என இணைக்கப்பட்டிருப்பதால் தேச உணர்வு மேலோங்கும் என்று தெரிவித்துள்ளார்.
7000 ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது என்றும் நமது அரசியல் அமைப்பு சட்டத்திலும் பாரதம் அல்லது இந்தியா என்று தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றிய பொழுது முழு மாநிலத்திலும் தேச உணர்வு இருந்ததை போல் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றும்போது அதே தேச உணர்வு மேலோங்கும் என்று தெரிவித்தார்.
பாடத்திட்டத்தில் இந்தியாவை பாரத் என்று மாற்றியது குறித்த கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் மேற்கண்ட பதிலை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran