வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2019 (15:25 IST)

யாகம் நடத்தியதினால் தான் மழை பெய்தது:தமிழிசை கருத்து

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், யாகம் நடத்தியதால் தான் மழை பெய்தது என கருத்து தெரிவித்துள்ளார்.

சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தால் அவதிபட்ட மக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை தந்தது.

இதனிடையே தமிழக பா.ஜ.க. கட்சி சார்பாக தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த யாகத்தால் தான் தமிழகத்தில் மழை பெய்தது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது கருத்தை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் பலர் கேலி செய்து வருகின்றனர்.

ஆனாலும், யாகம் செய்வதினால் மழை பெய்யும் எனவும், அதில் ஒரு வேத விஞ்ஞான அறிவியல் உள்ளதென்றும் மத நம்பிக்கையாளர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.