புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (23:15 IST)

கருணாநிதி தயவில்தான் டாக்டர் ஆனாரா தமிழிசை?

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பின்னர்தான் அரசியல்வாதிகள் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறி வருகின்றனர். நீட் தேர்வை ஆதரித்து வரும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் மகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தயவில்தான் மெடிக்கல் சீட் கிடைத்ததாக அரசியல் தலைவர் ஒருவர் ஃபேஸ்புக்கில் குற்றம் சாட்டிய விவகாரத்தின் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை



 
 
இந்த நிலையில் நீட் தேர்வை ஆதரித்து வரும் இன்னொரு தலைவரான பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திராஜன் அவர்களும் முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் பரிந்துரையால்தான் மெடிக்கல் சீட் பெற்றதால் திமுகவின் முக்கிய தலைவரான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
 
இன்னும் எத்தனை பேரின் உண்மைகள் வெளிவரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்