எங்க டார்கெட் விஜய் இல்ல: அது தான்; தமிழிசை ஓபன் டாக்
சர்கார் படத்தில் விஜய் அரசியல் பேசியிருப்பது குறித்து தமிழிழை கிண்டலடித்துள்ளார்.
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க நம்ம ஹெச்.ராஜா சார் டிவிட்டரில் திருடுறதுன்னு முடிவுபண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா என பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்து கடுப்பான ரசிகர்கள் அவரை கண்டபடி வசை பாடி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்யின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், எங்களின் டார்கெட் விஜய்யை குறை கூறுவது இல்லை.
கள்ளக்கதையை எடுத்துவிட்டு சினிமாவிலேயே நேர்மையாக இல்லாதவர்கள் அரசியலில் எப்படி நேர்மையாக இருப்பார்கள். விஜய் என்றாவது மக்களோடு மக்களாக சேர்ந்து கஷ்டப்பட்டிருக்கிறாரா? களப்பணியில் இறங்கி இதுவரை மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் இருந்துவிட்டு அரசியலில் நுழைந்து நேராக முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது தவறு. மாய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் விஜய் சினிமாவில் வேண்டுமானால் அரசியல் பண்ணலாம். நிஜத்தில் ஒருபோதும் அரசியல் பண்ண முடியாது என காட்டமாக பேசினார் தமிழிசை.