திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 நவம்பர் 2018 (19:58 IST)

அரசை அவமதித்த விஜய் ! அமைச்சர் நடவடிக்கை...அடுத்து என்னாகும்...?

சர்கார் திரைப்படத்தை அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்கு பதியப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜயோ, பட தயாரிப்பு நிறுவனமோ, சக நடிகர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் எந்த ஒரு திரைப்படமும் ஆளும் கட்சியை எதிர்த்துக் கொண்டு வெளிவரவில்லை.அப்படி வெள்ளிவந்தாலும் அது பல கட்ட விமர்சனங்களையும் போராட்டங்களையும் சந்தித்தே ஆக வேண்டியதென்பது நம் இந்திய அரசியலில் உள்ள எழுதப்படாத விதியாகும்.
 
தற்போது சர்காருக்கும் இதே நிலமைதான் உருவாகியுள்ளது. இவ்வளவு பிரச்சனைகள் உருவாகும் என்று தெரிந்தும் தைரியமாக இந்த படத்தில் நடித்தவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் உள்ளதுதான் வேடிக்கையாக உள்ளது.
 
அப்படியென்றால் வர்த்தக ரீதியாக படம் வெற்றியடைய வேண்டும் எனபதற்காக வாய்க்கு வருகிறதை சொன்னால் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்ற நினைப்புதான் காரணமோ...?
 
பொது வாழ்க்கைக்கு வர நினைக்கும் நடிகர்கள் இனியாவது இது பற்றி சிந்திக்கட்டும்.