1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (16:03 IST)

சாகித்ய அகடாமியை அடுத்து தமிழ் எழுத்தாளருக்கு பால புரஸ்கார் விருது விருது!

சாகித்ய அகடாமியை அடுத்து தமிழ் எழுத்தாளருக்கு பால புரஸ்கார் விருது விருது!
ஒவ்வோராண்டும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சாகித்திய அகடமி விருது வழங்கப்படும் வருகிறது என்றும், 2021 ஆம் ஆண்டு சாகித்ய அகடாமி விருது தமிழ் பெண் எழுத்தாளர் அம்பை லட்சுமி அவர்கள் எழுதிய சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற சிறுகதைக்கு சாகித்ய அகடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சாகித்ய அகாடமி விருதினை அடுத்து எழுத்தாளர் முருகேசன் என்பவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
ஒரே நாளில் இரண்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகடாமி மற்றும் பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளதை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.