1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (22:18 IST)

தமிழக பாரம்பரிய கலையான ஒயிலாட்ட அரங்கேற்ற விழா...!

vanipojan
கோவையில் நடைபெற்ற ஒயிலாட்டம் அரங்கேற்றத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானோர் வண்ண ஆடைகளுடன் உற்சாக நடனம் ஆடி அசத்தினர்…
 
கோவையை சேர்ந்த சிம்மக்குரல்  கலைக்குழு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம் வள்ளிகும்மி ஆகிய கலைகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.கிராமப்புறங்களில் மட்டுமே இந்த கலைகளை பலர் கற்று வந்த நிலையில், தற்போது இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் இது போன்ற தமிழக பாரம்பரிய கலைகளை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்..
 
இந்நிலையில் இவ்வாறு பயிற்சி பெற்ற ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா மணியகாரம்பாளையம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.திறந்த வெளி மைதானத்தில்,பாரம்பரிய கலைகள் குறித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழுவினரின் நாட்டுப்புற பாடல்கள் பம்பை இசையுடன் , முளைப்பாரி ,ஒயிலாட்ட சீர் வரிசையுடன்,வண்ண ஆடைகளுடன்,கோலமிட்ட மைதானத்தில்,  நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வயது வித்தியாசமின்றி  இணைந்து பம்பை இசை முழங்க , கூடி நின்று ஒயிலாட்டம் அரங்கேற்றம் நடத்தியது கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
 
குதிரைகள், காளைகள் பங்குபெற்றத்துடன் அதிக கலைஞர்கள் இணைந்து தொடர்ந்து நான்கு மணி நேரம் ஆடிய இந்த ஒயிலாட்ட அரங்கேற்ற விழா நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது…