1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 மார்ச் 2023 (07:29 IST)

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.. ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து முக்கிய ஆலோசனை..!

tn ministry
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.. ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து முக்கிய ஆலோசனை..!
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாகவும் இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம் மசோதா குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 கடந்த அக்டோபர் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில் இன்று தமிழக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 
 
இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா திருப்பி அனுப்பியது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் அதேபோல் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 கொடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆளுநர் ரவி கூறிய போது தமிழ்நாடு அரசுக்கு இந்த மசோதாவை இயற்ற அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்படும் என்றும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva